தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துரையாடல்


தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 8 March 2020 5:00 AM IST (Updated: 7 March 2020 5:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துரையாடினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துரையாடினார்.

கலந்துரையாடல் 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவிகள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி மாணவிகள் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பார்வையிட்டனர். அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது;–

அனைத்து தேர்வுகளிலும்... 

வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் பயனாளிகளுக்கு அரசால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டங்கள் பெற வேண்டும் என்றால் எந்த துறையை அணுக வேண்டும் என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தங்களது பகுதியில் சாலை பழுது ஏற்பட்டால் பஞ்சாயத்து செயலரை அணுகி தங்களின் குறைகளை முன்வைக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி பகுதியில் உள்ளவர்கள் பேரூராட்சி அல்லது நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தெரிவிக்க வேண்டும்.

வருவாய் துறையின் மூலம் சான்றுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசின் கீழ் ஒவ்வொரு மாவட்டங்களிலும் 40 துறைகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கல்லூரியில் படிக்கும்போதே எதிர்கால லட்சியத்தை வளர்த்துக்கொண்டு அதற்கேற்ப தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். போட்டி தேர்வுகள் அனைத்திலும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். அது உங்கள் திறமையை வெளிபடுத்த உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம், ஆதிதிராவிடர் பெண்கள் கல்லூரி விடுதி காப்பாளர் கலைச்செல்வி மற்றும் கல்லூரி மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story