கொரோனா வைரஸ் பாதிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பேர் கண்காணிப்பில் உள்ளனர் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கொரோனா வைரஸ் பாதிப்பு:  தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பேர் கண்காணிப்பில் உள்ளனர் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 8 March 2020 3:30 AM IST (Updated: 7 March 2020 6:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக 54 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக 54 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–

54 பேர் கண்காணிப்பு 

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை எந்த தகவலும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு விமான நிலையத்தில் உரிய சோதனை நடத்தப்பட்டு இருக்கும். இருந்த போதும், அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்புபவர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 54 பேர் அவர்களின் வீடுகளில் வைத்து தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தினமும் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று உடல்நிலை பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சுத்தம்–சுகாதாரம் 

மேலும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு இருமல் இருந்தால் உடனடியாக டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும். அனைவரும் தங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் கொரோனா வைரல் பரவாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story