9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி, நகர்ப்புற தேர்தல் விரைவில் நடைபெறும்; மாநில தேர்தல் ஆணையர் தகவல்


9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி, நகர்ப்புற தேர்தல் விரைவில் நடைபெறும்; மாநில தேர்தல் ஆணையர்  தகவல்
x
தினத்தந்தி 7 March 2020 10:30 PM GMT (Updated: 7 March 2020 7:27 PM GMT)

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி, நகர்ப்புற தேர்தல் விரைவில் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்கள், அரசியல் கட்சியினருடனான கருத்து கேட்பு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவரும், மாநில தேர்தல் ஆணையருமான ரா.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் மறுவரையறை ஆணைய செயலர் எல்.சுப்பிரமணியன், கூடுதல் இயக்குனர்கள் பி.ஆனந்தராஜ், லட்சுமிபதி, இணை இயக்குனர் எம்.சரவணன், கூடுதல் இயக்குனர் மாலதி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருண்குமார், வேலூர் மண்டல நகராட்சிகள் இயக்குனர் டாக்டர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமே‌‌ஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவரும், மாநில தேர்தல் ஆணையருமான ரா.பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டிய 9 மாவட்டங்களுக்கு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் விரைவில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற தேர்தல் நடைபெறும்’ என்றார்.

பின்னர் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று உள்ளாட்சி தேர்தல் பணிக்கு உரிய பதிவேடுகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை பார்வையிட்டார்.

Next Story