மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல் + "||" + Cauvery Farmers' Protection Association urges to build door on Koladi river

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என்று காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கும்பகோணம்,

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கவுரவ தலைவர் தர்மராஜன் தலைமை தாங்கினார். தலைவர் சின்னதுரை, துணை செயலாளர் சுகுமாரன், நிர்வாகிகள் சாமிநாதன், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் விமலநாதன் பேசினார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் தேவையான திருத்தங்களை செய்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பயிர்க்கடன் மானியத்தை, மத்திய அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்ததோடு பயிர்க்கடன், நகை கடன் வட்டியை 7 சதவீதத்திலிருந்து 9.25 சதவீதமாக உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. எனவே வேளாண்மை உற்பத்திக்கு வட்டியில்லா கடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்க வேண்டும்.

நினைவு மண்டபம்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி போராடிய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். அரியலூர், திருச்சி மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் இணைக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு கல்லணையில் நினைவு மண்டபமும், இயற்கை வழி வேளாண் பல்கலைக்கழகத்தை

நம்மாழ்வார் பெயரில் தஞ்சை மாவட்டத்தில் தொடங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அதிகப்படுத்தி, அத்திட்டத்தை கேரளா மாநிலம் போன்று வேளாண்மை பணிகளுக்கு பயன்படும் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும்.

ஓய்வூதியம்

கேரளாவில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 795 ஆதார விலையையும் உத்தரப்பிரதேசம், மகாரா‌‌ஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்து 200 வழங்கப்படுவது போல தமிழக அரசும் விலை அறிவித்து வழங்க வேண்டும்.

ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட குறுவை சம்பா தொகுப்பு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

குடிதாங்கி- திருவைகாவூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களில் 500 புதிய நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். 55 வயதை கடந்த அனைத்து விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் கோடை உழவை தவற விடக்கூடாது வேளாண் இணை இயக்குனர் தகவல்
பயிர்கள் செழித்து மகசூல் தர உதவும் கோடை உழவை விவசாயிகள் தவற விடமால் மேற்கொள்ள வேண்டும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளதால் தொழில்கள் வளர்ச்சி அடையும்
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பல பொருட்கள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் தொழில்கள் வளர்ச்சி அடையும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
3. டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: குடையுடன் வரிசையில் நின்று மதுபானம் வாங்கினர்
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குடையுடன் வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்கினர்.
4. உசிலம்பட்டி அருகே கனமழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசம் விவசாயிகள் வேதனை
உசிலம்பட்டி அருகே பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
5. ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான கேண்டீனில் காணாமல் போன சமூக இடைவெளி
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.