மேலூர் அருகே கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா வீடுகள் தோறும் ‘கமகம’ மீன் வாசனை
மேலூர் அருகே நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் ஏராளமானோர் அதிக எடையுள்ள மீன்களை பிடித்துச்சென்றனர்.
மேலூர்,
மழைக்காலத்தில் கண்மாய் தண்ணீரில் வளரும் மீன்களை யாரும் பிடிக்கக்கூடாது என்ற ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்து கிராம மக்கள் மீன்களை வளர்த்து வருகின்றனர்.பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி மீன் பிடித்து செல்வதும் பாரம்பரிய வழக்கம்.
அதன் படி நேற்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே சுற்று வட்டார கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
மேலும் சிவகங்கை, சிங்கம்புணரி, நத்தம், வாடிப்பட்டி, திருப்புவனம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற வாரச்சந்தைகளிலும் கல்லம்பட்டி கிராம கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது குறித்து தண்டோரா முழங்க அறிவிப்புகள் செய்யப்பட்டன.
மீன் பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமானோர் நேற்று முன் தினம் இரவே கண்மாய்க்கு வந்து குவிந்தனர். இரவு முழுவதும் சாரை சாரையாய் பெண்கள் உள்பட ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அனைவரும் கண்மாய் கரையிலேயே தூங்கினர்.
கிராம பாரம்பரிய வழக்கப்படி பெரியவர்கள் சாமி கும்பிட்டு கண்மாய் கரையில் நின்று வெள்ளை துண்டுகளை அசைத்து மீன் பிடிக்க அனுமதி வழங்கினர்.
அது வரை பொறுமையுடன் காத்திருந்த பொதுமக்கள் கண்மாயின் 4 திசைகளிலும் இருந்து ஒரே நேரத்தில் கண்மாய் தண்ணீருக்குள் மீன் பிடிக்க ஓடினர். அப்போது தண்ணீருக்குள் இருந்து மீன்கள் வெளியே துள்ளி குதித்தன.
பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த கச்சா வலைகள் மற்றும் பல்வேறு வகையான வலைகளை பயன்படுத்தி மீன்களை ஆர்வத்துடன் பிடித்தனர்.
கட்லா, சிலேபி, கெண்டை உள்ளிட்ட பல வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்துச்சென்றனர். குறைந்த அளவிலான மீன்களே கிடைத்தன. இந்த மீன்களை விலைக்கு விற்றால் தெய்வ குற்றம் என்பது ஐதீகம். இதனால் பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை வீடுகளில் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
கிராமங்களில் வீடுகள் ேதாறும் மீன் உணவு வாசனையே வீசியது. பொதுமக்களிடையே ஒற்றுமையையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் இந்த மீன்பிடி திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கல்லம்பட்டி கிராமத்தில் பெரிய பரப்பளவில் செங்குண்டு கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் ஆண்டுதோறும் மாசி மாதம் மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மழைக்காலத்தில் கண்மாய் தண்ணீரில் வளரும் மீன்களை யாரும் பிடிக்கக்கூடாது என்ற ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும் இருந்து கிராம மக்கள் மீன்களை வளர்த்து வருகின்றனர்.பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி மீன் பிடித்து செல்வதும் பாரம்பரிய வழக்கம்.
அதன் படி நேற்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதற்கு முன்னதாகவே சுற்று வட்டார கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
மேலும் சிவகங்கை, சிங்கம்புணரி, நத்தம், வாடிப்பட்டி, திருப்புவனம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற வாரச்சந்தைகளிலும் கல்லம்பட்டி கிராம கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது குறித்து தண்டோரா முழங்க அறிவிப்புகள் செய்யப்பட்டன.
மீன் பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமானோர் நேற்று முன் தினம் இரவே கண்மாய்க்கு வந்து குவிந்தனர். இரவு முழுவதும் சாரை சாரையாய் பெண்கள் உள்பட ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அனைவரும் கண்மாய் கரையிலேயே தூங்கினர்.
கிராம பாரம்பரிய வழக்கப்படி பெரியவர்கள் சாமி கும்பிட்டு கண்மாய் கரையில் நின்று வெள்ளை துண்டுகளை அசைத்து மீன் பிடிக்க அனுமதி வழங்கினர்.
அது வரை பொறுமையுடன் காத்திருந்த பொதுமக்கள் கண்மாயின் 4 திசைகளிலும் இருந்து ஒரே நேரத்தில் கண்மாய் தண்ணீருக்குள் மீன் பிடிக்க ஓடினர். அப்போது தண்ணீருக்குள் இருந்து மீன்கள் வெளியே துள்ளி குதித்தன.
பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த கச்சா வலைகள் மற்றும் பல்வேறு வகையான வலைகளை பயன்படுத்தி மீன்களை ஆர்வத்துடன் பிடித்தனர்.
கட்லா, சிலேபி, கெண்டை உள்ளிட்ட பல வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்துச்சென்றனர். குறைந்த அளவிலான மீன்களே கிடைத்தன. இந்த மீன்களை விலைக்கு விற்றால் தெய்வ குற்றம் என்பது ஐதீகம். இதனால் பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை வீடுகளில் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
கிராமங்களில் வீடுகள் ேதாறும் மீன் உணவு வாசனையே வீசியது. பொதுமக்களிடையே ஒற்றுமையையும், சமத்துவத்தையும் நிலைநாட்டும் இந்த மீன்பிடி திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story