நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உத்தரவிட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் மெகராஜ் முன்னிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
கூட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் அனுபவங்கள், மாநில தேர்தல் ஆணையத்தின் பல்வேறு பணிகள் கணினி மயமாக்கப்பட்டு இருப்பதன் பயன்கள் குறித்தும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சி பகுதிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
அடிப்படை வசதிகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வார்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளனவா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பொருத்த பேரூராட்சி அலுவலகங்களில் தேவையான இடவசதி உள்ளதா? என்று கேட்டறிந்து உறுதி செய்தார்.
இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ) மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) மீராபாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) அருளாளன் உள்பட நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story