புகார் அளிக்க வந்த வாலிபர் மீது தாக்குதல்: பெண் போலீஸ் ஏட்டுவிடம் விசாரணை தொடங்கியது
கோவை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக பெண் போலீஸ் ஏட்டுவிடம் விசாரணை தொடங்கியது.
பேரூர்,
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. மேலும் பெண் ஏட்டு கிருஷ்ணவேணி அநாகரீகமாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் புகார் அளித்தனர்.
இதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம், இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில் புகார் அளிக்க வந்தவரை தாக்கிய பெண் ஏட்டு கிருஷ்ணவேணி குறித்து விசாரித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணவேணியிடம் நேற்று விசாரணை தொ டங்கியது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story