இரணியலில் டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்


இரணியலில் டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2020 5:30 AM IST (Updated: 8 March 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

இரணியலில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை - நாகர்கோவில் சாலையில் இரணியல் சந்திப்பில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த பகுதியில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை உள்ளதால் கடையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

தற்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் பரவியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரணியல் சந்திப்பில் திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டம்

நேற்று காலை 11 மணியளவில் முன்னாள் கவுன்சிலர் சைலஜா தலைமையில் ஏராளமான பெண்கள் கடை முன்பு திரண்டனர். அவர்கள் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இரணியல் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோபகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறிது நேரம் கடந்து ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது, பெண்கள் கடையை திறக்க விடாமல் கோஷம் எழுப்பினர். இதையடுத்து ஊழியர்கள் திரும்ப சென்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடையில் இருக்கும் பொ ருட்களை முழுமையாக அப்புறப்படுத்தினால்தான் போராட் டத்தை கைவிடுவோம் என பெண்கள் தெரிவித்தனர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுமாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து மாலை 3 மணியளவில் பெண்கள் அை- னவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், நேற்று முழுவதும் அந்த கடை திறக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story