நத்தம் அருகே ரூ.65 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமிபூஜை
நத்தம் அருகே ரூ.65 லட்சம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.
நத்தம்,
நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி தெப்பக்குளத்திலிருந்து பூஞ்சோலை வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு ரூ.65 லட்சம் செலவில் புதிதாக தார்சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. இதற்கு நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய ஆணையாளர் முனியாண்டி, அ.தி.மு.க. ஒன்றியசெயலாளர் ஷாஜகான், நகரசெயலாளர் சிவலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைசெயலாளர் ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முரளி, ஜெயபால், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிபிரியா கோபிநாத், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆண்டிசாமி, ஆசை, சேக்ஒலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story