திருச்செந்தூர் மணிமண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை இரா.கண்ணன் ஆதித்தன் அணிவித்தார்
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காரும், ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், பா.ஜ.க. மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், கே.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், குமரேச ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், கோகுல ஆதித்தன், ஜவகர் சொக்கலிங்க ஆதித்தன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், அரசு நூலகர் மாதவன், பாலமுருகன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story