அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் 3-வது நீரேற்று நிலையம் கட்டும் பணிகள் தொடக்க விழா
பெருந்துறை அருகே அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் 3-வது நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
பெருந்துறை,
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 3-வது நீரேற்று நிலையம் பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி ஊராட்சியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஈரோடு சக்தி நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி விழாவுக்கு தலைமை தாங்கினார். தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்து பேசினார், அப்போது அவர் 'இந்த திட்டத்தை 2019-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி அவினாசியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களில் உள்ள 32 ஏரிகள், 42 குளங்கள், 970 குட்டைகளில் நீர் நிரப்பப்படுகிறது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் 3-வது நீரேற்று நிலையத்தின் பணிகள் முடிவடைந்துவிடும்' என்றார்.
பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர் சாந்திஜெயராஜ், துணை தலைவர் உமாமகேஸ்வரன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், அவைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழுஉறுப்பினர்கள் அப்புசாமி, பார்வதி, ஹேமலதா, அத்திக்கடவு-அவினாசி திட்ட கோரிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெரியசாமி, முருகபூபதி உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டார்கள். முன்னதாக அனைவரையும் அத்திக்கடவு-அவினாசி திட்ட செயற்பொறியாளர் மன்மதன் வரவேற்று பேசினார்.
Related Tags :
Next Story