மாவட்ட செய்திகள்

அரியலூரில் மகளிர் தினவிழா மாவட்ட முதன்மை நீதிபதி கலந்து கொண்டார் + "||" + Women's Day at Ariyalur District Chief Justice attended

அரியலூரில் மகளிர் தினவிழா மாவட்ட முதன்மை நீதிபதி கலந்து கொண்டார்

அரியலூரில் மகளிர் தினவிழா மாவட்ட முதன்மை நீதிபதி கலந்து கொண்டார்
அரியலூரில் ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா ராஜாஜி நகரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது.
அரியலூர்,

அரியலூரில் ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினவிழா ராஜாஜி நகரில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு தலைமை செயல் அதிகாரி ஜெ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, அறிமுக உரையாற்றினார். இதில் அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு, சுயதொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அறக்கட்டளை பொறுப்பாளர் பத்மாவதி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். எம்.எம்.மருத்துவமனையின் தலைமை அதிகாரி டாக்டர் இசையொலி மதன்குமார், அரியலூர் மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னியம்மாள், எழுத்தாளர் சோபனா பன்னீர்செல்வம் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள், அனைத்து ஆசிரியர் கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சங்கர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கியில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கூறினார்.
2. மகளிர் தினத்தையொட்டி கோவை-பெங்களூரு ரெயிலை இயக்கிய பெண்கள்
உலக மகளிர் தினத்தையொட்டி கோவை-பெங்களூரு ரெயிலை இயக்கிய பெண்களுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.