குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மயிலாடுதுறையில், இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம் 13-வது நாளாக நடந்தது


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மயிலாடுதுறையில், இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டம் 13-வது நாளாக நடந்தது
x
தினத்தந்தி 9 March 2020 5:00 AM IST (Updated: 9 March 2020 2:09 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மயிலாடுதுறையில் இஸ்லாமியர்கள் நேற்று 13-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன பள்ளிவாசல் தெருவில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்தது. போராட்டத்துக்கு முகமது சாதிக் தலைமை தாங்கினார். குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சாளர் அமீன், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில செயலாளர் தாஜுதீன், தேசிய லீக் மாநில பொறுப்பாளர் பெரோஸ்கான், மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செய லாளர் மாயவரம் அமீன், பேச்சாளர் பழனிபாருக் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

வழக்குப்பதிவு

நேற்று முன்தினம் 12-வது நாளாக நடந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பாக்கர், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில செயலாளர் அல்பா நசீர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் உள்பட 10 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story