குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: தஞ்சையில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: தஞ்சையில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 9 March 2020 5:30 AM IST (Updated: 9 March 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் முஸ்லிம்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் முஸ்லிம்களின் காத்திருப்பு போராட்டம் 23-வது நாளாக நேற்று நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் உள்ள அத்தர்பள்ளிவாசல் அருகே ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு மற்றும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த போராட்டம் 23-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தர்ணா

இந்த நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 5 நாட்கள் மாலையில் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 6-ந்தேதி இந்த போராட்டம் தொடங்கியது. வருகிற 10-ந்தேதி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. நேற்று 3-வது நாள் நடந்த தர்ணா போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இக்பால் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் ஜாகிர்உசேன், காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

Next Story