ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் விபத்துகள் அதிகரிப்பு சீரமைக்க கோரிக்கை


ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் விபத்துகள் அதிகரிப்பு சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 March 2020 4:30 AM IST (Updated: 9 March 2020 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிங்கப்பெருமாள்கோவில் சாலை, தாம்பரம், குன்றத்தூர் சாலைகள் இணையும் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிகரிப்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார்,

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே சிங்கப்பெருமாள்கோவில் சாலை, தாம்பரம், குன்றத்தூர் சாலைகள் இணையும் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டு அருகே, பல லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில மாதங்கள் இயங்கிய சிக்னல் முறையான பராமரிப்பு இல்லாததால், பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாடின்றி செல்கிறது. ஆகவே இந்த சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக போக்குவரத்துள்ள இந்த சாலையில், தானியங்கி சிக்னல் இயங்காததால், போக்குவரத்து போலீசார் வெயிலிலும், மழையிலும் பணியாற்ற வேண்டியுள்ளது.

கோர்ட்டு, அரசு பள்ளி, அரசு ஆஸ்பத்திரி, வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ள இந்தபகுதியில், தானியங்கி சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story