மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர் + "||" + Tourists gathered at the Oakenakkal enjoyed the prize

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனிடையே கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு 2,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவில் தண்ணீர் கொட்டியது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது.


இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

உற்சாக குளியல்

இந்தநிலையில் வாரவிடு முறையான நேற்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

கோடை வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் இளநீர், குளிர்பானம், தர் பூசணி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு சூட்டை தணித்தனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆலாம்பாடி, மணல் திட்டு, முதலை பண்ணை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு
திருச்சி விமான நிலையத்தில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைக்கப்பட்டனர்.
2. கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடல்: சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
3. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
4. காரைக்கால்-இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல் மத்திய இணை மந்திரி தகவல்
காரைக்கால்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்கு வரத்து தொடங்கப்படும் என்று மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
5. ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.