தக்கலை அருகே வாலிபரை தாக்கி மொட்டை அடித்து வீடியோ எடுத்த கும்பல் போலீசார் விசாரணை
தக்கலை அருகே வாலிபரை தாக்கி, மொட்டை அடித்து வீடியோ எடுத்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே கஞ்சிகுழி பகுதியை சேர்ந்த அருள்சேகர் மகன் ஜெயின் (வயது 18). பிளஸ்-2 படித்துவிட்டு மேற்படிப்புக்கு முயற்சி செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் ஜெயின் வீட்டில் இருந்த போது அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் பள்ளியாடி பகுதிக்கு வருமாறு அழைத்தார்.
உடனே, ஜெயின் பள்ளியாடி நான்குவழி சாலை பகுதியில் சென்றார். அப்போது, அங்கு நின்ற கஞ்சிகுழியை சேர்ந்த கல்லூரி மாணவர் லியோ, அபீஸ், செரின் உள்பட 8 பேர் அடங்கிய கும்பல் ஜெயினை வழிமறித்து தாக்கினர். தொடர்ந்து அவரது தலைமுடியை மொட்டை அடித்து வீடியோ எடுத்தனர். அத்துடன், இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்புவதாக மிரட்டிவிட்டு தப்பி சென்றனர்.
போலீசில் புகார்
படுகாயம் அடைந்த ஜெயினை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லியோ, அபீஸ், செரின் உள்பட 8 பேரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story