வீட்டில் காதலனுடன் இருந்தபோது, தாய் வந்ததால் பதற்றம் மாடியில் இருந்து குதித்த சிறுமியின் கால் முறிந்தது


வீட்டில் காதலனுடன் இருந்தபோது, தாய் வந்ததால் பதற்றம் மாடியில் இருந்து குதித்த சிறுமியின் கால் முறிந்தது
x
தினத்தந்தி 9 March 2020 5:26 AM IST (Updated: 9 March 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் காதலனுடன் இருந்தபோது, தாய் வந்ததால் மாடியில் இருந்து குதித்த சிறுமியின் கால் முறிந்தது.

மும்பை,

மும்பை குர்லா பாயில் பஜார் பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் குடும்பத்துடன் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை. அப்போது, சிறுமியின் காதலன் சுனில்(வயது20) அங்கு வந்துள்ளார். சிறுமியும், காதலனும் படுக்கை அறையில் பொழுதை கழித்து உள்ளனர்.

அப்போது திடீரென சிறுமியின் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து பதற்றத்தில் சிறுமி, காதலனுடன் வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். இதில், சிறுமியின் கால் முறிந்து உள்ளது.

இது குறித்து குடும்பத்தினர் விசாரித்த போது காதலனுடன் வீட்டில் இருந்ததை சிறுமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் சம்பவம் குறித்து வி.பி.நகர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் சிறுமியின் காதலன் மீது போலீசார் கற்பழிப்பு, அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story