கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை
x
தினத்தந்தி 10 March 2020 3:30 AM IST (Updated: 10 March 2020 12:43 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.40 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். அதன்படி கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 263 விவசாயிகள் நேற்று விற்பனைக்காக உளுந்து, மக்காச்சோளம், கம்பு உள்பட மொத்தம் 800 தானிய மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த தானிய மூட்டைகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டிபோட்டு கொள்முதல் செய்தனர். இதில் 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உளுந்து அதிகபட்சமாக ரூ. 6,743-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5,778- க்கும் விற்பனையானது.

இதேபோல் ஒரு மூட்டை மக்காச்சோளம் அதிகபட்சமாக ரூ.1,609-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,529-க்கும், ஒரு மூட்டை கம்பு அதிக பட்சமாக ரூ.2,849-க்கும், குறைந்த பட்சமாக ரூ.2,480-க்கும், ஒரு மூட்டை வரகு அதிக பட்சமாக ரூ.2,031 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,829-க்கும் விற்பனையானது. இது தவிர மணிலா, எள், பச்சைப்பயிர், தட்டைப்பயிர் ஆகியவையும் விற்பனையானது. மொத்தம் ரூ.40 லட்சத்து 4 ஆயிரத்துக்கு தானிய மூட்டைகள் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Next Story