பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்


பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 March 2020 4:00 AM IST (Updated: 10 March 2020 2:02 AM IST)
t-max-icont-min-icon

பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

க.பரமத்தி,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெர்க்மான்ஸ் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் வேலுமணி வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம், மாவட்ட மூத்தோரணி அமைப்பாளர் சீத்தாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், விரைவில் திறக்கப்படவுள்ள புதிய மாநில கட்டிடத்திற்கு பொதுச்செயலாளரால் பரிந்துரைக்கப்பட்ட பொருள்களில் கரூர் மாவட்ட கிளை சார்பாக ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 12 மின் விசிறிகள் வழங்குவது, தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணிவரன்முறைக்காக முகாம் நடத்தப்படாத விடுபட்ட ஒன்றியங்களில் விரைவில் முகாம் நடத்த கரூர் மாவட்டக் கல்வி அலுவலரை இச்செயற்குழுவின் வாயிலாகக் கேட்டு கொள்வது.

ஊதியம் வழங்க வேண்டும்

கரூர் மற்றும் தாந்தோணி ஒன்றியத்தில் பிப்ரவரி 2020-க்கான ஊதியம் இதுநாள் வரை பெற்று வழங்கப்படவிவல்லை. உடனடியாக பெற்று வழங்க கரூர் மற்றும் தாந்தோணி வட்டாரக் கல்வி அலுவலர்களை கேட்டு கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அமுதா, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் செல்வக்கண்ணன், தாந்தோணி ஒன்றிய செயலாளர் துரைமுருகன்,தோகைமலை ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், கடவூர் ஒன்றிய அமைப் பாளர் மணிவண்ணன், க.பரமத்தி ஒன்றிய பொருளாளர் பாலசுப்பிரமணி, தாந்தோணி ஒன்றிய பொருளாளர் அன்பரசன்,தோகைமலை ஒன்றிய தலைவர் ஜஸ்டின் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் க.பரமத்தி ஒன்றியத் தலைவர் பானுமதி நன்றி கூறினார்.

Next Story