அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி வார்டு தயார் நிலையில் மருத்துவக்குழு
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
கும்பகோணம்,
கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
14 படுக்கைகள்
அந்த வார்டில் 14 படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த வார்டின் வெளியே கொரோனா வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க மருத்துவக்குழுவினர் பணியமர்த்தப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Related Tags :
Next Story