மாமல்லபுரத்துக்கு மத்திய மந்திரி வருகை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் நேற்று அத்துறை அதிகாரிகளுடன் சுற்றுலா வந்தார்.
மாமல்லபுரம்,
கடற்கரை கோவில் அருகில் மத்திய மந்திரியை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், மாமல்லபுரம் தொல்லியல் துறை உதவி அலுவலர் ரவிச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பலராமன், மாமல்லபுரம் நகர பா.ஜ.க. தலைவர் எம்.ஸ்ரீதர் உள்பட பலர் வரவேற்றனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை மத்திய மந்திரி கண்டுகளித்தார். அவருக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று பெருமைகளையும், பல்லவர் கால சிற்பங்கள், அது உருவாக்கப்பட்ட காலம், அதனை செதுக்கிய மன்னர்கள் குறித்த விவரங்களை தொல்லியல் துறை அதிகாரிகளும், சுற்றுலா வழிகாட்டிகளும் விளக்கி கூறினர்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் கண்டுகளித்து புகைப்படம் எடுத்த முக்கிய புராதன பகுதியில் மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
மத்திய மந்திரியுடன் மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன், பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகி பாரதி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Related Tags :
Next Story