மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல் + "||" + Coronavirus virus in Kanchipuram 8 were not affected Official Information

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதி: சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை அதிகாரி தகவல்
காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பீதியில் சிறப்பு பரிசோதனை செய்யப்பட்ட 8 பேருக்கு பாதிப்பு இல்லை என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓமன் நாட்டில் இருந்து காஞ்சீபுரம் வந்த என்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.


என்ஜினீயரின் உறவினர், நண்பர்கள் என 22 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு மருத்துவ குழுவினர் சிறப்பு பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதியானது. 22 பேரும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
2. கொரோனாவுக்கு சென்னை பூந்தமல்லியில் சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு
குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
3. இதயத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ் - மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு இதயத்தை பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
4. மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியது.