சேலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்


சேலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 10 March 2020 11:00 PM GMT (Updated: 10 March 2020 9:34 PM GMT)

சேலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

சேலம்,

சேலம் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கோரிக்கை

வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு தாலுகா வாரியாக குடியிருக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நிபந்தனை அடிப்படையில் பால்பூத் அமைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும,் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில், மாவட்ட பொருளாளர் முத்துசாமி, துணைத்தலைவர் சின்னதுரை, துணை செயலாளர் அண்ணாமலை மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story