கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி வெளிநாடு சென்று குமரி திரும்பிய 5 பேர் கண்காணிப்பு சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், வெளிநாடு சென்று குமரி மாவட்டம் திரும்பிய 5 பேர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருந்து வருவதாக அதிகாரி தெரிவித்தார்.
நாகர்கோவில்,
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கானோரை உயிர்ப்பலி வாங்கியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்திலும் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அமெரிக்கா சென்று ஊர் திரும்பியுள்ளனர். அதாவது அந்த குடும்பத்தில் கணவன்- மனைவி மற்றும் 2 பிள்ளைகள் அமெரிக்கா சென்று திரும்பி உள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த குடும்பத்தினரை தனிமைப்படுத்தி வைத்து, அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்களை மக்கள் கூடும் இடங்களுக்கோ, வெளியூர்களுக்கோ குறிப்பிட்ட நாட்கள் வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இவர்களுக்கு கடுமையான காய்ச்சலோ, சளி பிரச்சினை போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு
இதேபோல் இத்தாலி சென்று திரும்பிய குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்றொருவரும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜன் கூறும்போது, ‘குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை. சமீபத்தில் சுற்றுலாவுக்காக அமெரிக்கா மற்றும் இத்தாலி சென்று வந்த 5 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்‘ என்றார்.

Related Tags :
Next Story