3 வயது குழந்தையை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி உள்பட 3 பேர் கைது பெற்ற குழந்தையையும் ரூ.70 ஆயிரத்திற்கு விற்றது அம்பலம்


3 வயது குழந்தையை கடத்தி விற்க முயன்ற வழக்கில்   தலைமறைவாக இருந்த தொழிலாளி உள்பட 3 பேர் கைது  பெற்ற குழந்தையையும் ரூ.70 ஆயிரத்திற்கு விற்றது அம்பலம்
x
தினத்தந்தி 10 March 2020 11:51 PM GMT (Updated: 10 March 2020 11:51 PM GMT)

பெங்களூருவில் 3 வயது குழந்தையை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். பெற்ற குழந்தையையும் ரூ.70 ஆயிரத்திற்கு விற்றது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசபாலாநகரை சேர்ந்தவர் பசவராஜ். தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு 3 வயதில் அர்ஜூன் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதி வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்த அர்ஜூனை மர்மநபர்கள் கடத்தி சென்றனர்.

பின்னர் 2 நாட்கள் கழித்து மல்லேசுவரம் அருகே சுற்றி திரிந்த குழந்தையை போலீஸ்காரர் ஒருவர் மீட்டு பசவராஜிடம் ஒப்படைத்திருந்தார். குழந்தையை கடத்தி சென்றிருந்த மர்மநபர்கள் மல்லேசுவரம் அருகே விட்டு சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில், குழந்தையை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி உள்பட 3 பேரை வித்யாரண்யபுரா போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தொழிலாளியான கர்ணா (வயது 48) என்று தெரிந்தது. மற்ற 2 பேரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஆவார்கள்.

ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை

இவர்களில் கர்ணாவுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ பிடிக்காமல் தனியாக வாழ்ந்துள்ளார். மேலும் கர்ணாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண் மூலமாக கர்ணாவுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில், கர்ணாவுடன் வாழ பிடிக்காமல் குழந்தையை விட்டுவிட்டு அந்த பெண் ஓடிவிட்டார்.

இதனால் தனது குழந்தையை உறவினர் ஒருவருக்கு ரூ.70 ஆயிரத்திற்கு கர்ணா விற்று இருந்தார். இதையடுத்து, எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் பசவராஜ்-லட்சுமி தம்பதியின் குழந்தை அர்ஜூனை பிப்ரவரி 29-ந் தேதி 2 சிறுவர்கள் மூலமாக கர்ணா கடத்தி இருந்தார். அந்த குழந்தையை விற்று பணம் சம்பாதிக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

கண்காணிப்பு கேமரா மூலம்...

ஆனால் குழந்தையை விற்க முடியாத காரணத்தால், மல்லேசுவரம் அருகே கர்ணா விட்டு சென்றது தெரியவந்தது.

கடத்தல் நடந்த பின்பு ஒசபாலாநகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலமாக கர்ணா உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.

விசாரணைக்கு பின்பு கர்ணா சிறையில் அடைக்கப்பட்டார். அதுபோல பிடிபட்ட 2 சிறுவர்களும், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

Next Story