ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி கொடுத்தது அரசியல் சாணக்கியத்தனம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி கொடுத்தது அரசியல் சாணக்கியத்தனம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 11 March 2020 4:15 AM IST (Updated: 11 March 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

ஜி.கே.வாசனுக்கு எம்.பி.பதவி கொடுத்தது அரசியல் சாணக்கியத்தனம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை, 

மதுரை மாநகராட்சி சொக்கலிங்கநகர் மற்றும் முத்துப்பட்டியில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவிலான புதிய தார்ச்சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்து பேசினார்.

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சி 19-வது வார்டு சொக்கலிங்க நகர் 4, 5, 6, 7-வது மெயின் தெருக்கள் மற்றும் குறுக்கு தெருக்கள் உள்ளிட்ட 6 தெருக்களுக்கு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே இந்த வார்டு பகுதியில் ஆழ்துளை கிணறுகள், தார்ச் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் என ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது 7 பணிகள் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூ.3.93 கோடி மதிப்பீட்டில் 12 சாலைப்பணிகள் இந்த வார்டு பகுதியில் நடந்து உள்ளது.

முத்துப்பட்டி பகுதியில் சுசீலா ெரங்கநாதன் அவென்யூ மற்றும் குறுக்கு தெருக்களில் ரூ.20 லட்சம் செலவில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த வார்டில் 6 பணிகள் ரூ.59 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள் ளது. தற்போது 7 சாலைப்பணிகள் ரூ.1.56 கோடி செலவில் நடந்து வருகிறது. இந்த வார்டில் மட்டும் ரூ.2.28 கோடி செலவில் பணிகள் நடைபெற்றுள்ளது.

மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மத்திய மற்றும் மாநில அரசின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இவற்றிற்கு நிதியுதவி வழங்கும் வங்கிகளும் ஆய்வு செய்துதான் நிதியுதவி வழங்குகின்றன. மேலும் பூங்கா பணிகள், சாலைகள், பாலங்கள், உயர்மட்ட பாலங்கள் ஆகிய அனைத்து பணிகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி கொடுத்ததில் பல்வேறு அரசியல் விஷயங்கள் இருக்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர்.

இது அரசியல் சாணக்கியத்தனம். 2021-ம் ஆண்டு விஜயகாந்த் முதல்-அமைச்சர் ஆவார் என்று தே.மு.தி.க. சார்பில் சொல்லப்படுவது அவர்கள் கட்சியை சார்ந்தது. அந்த கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர்கள் அப்படி சொல்கிறார்கள். ஏன் இப்போது தொடங்கிய நடிகர் கட்சியில் கூட அந்த நடிகர் தான் முதல்-அமைச்சர் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்து கொள்ள கூடாது. தே.மு.தி.க. எங்களது தோழமை கட்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story