கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மாணவர்களை அடிக்கடி கைகழுவ வைக்க வேண்டும் - பள்ளிகளுக்கு கல்வி அதிகாரி சுற்றறிக்கை


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மாணவர்களை அடிக்கடி கைகழுவ வைக்க வேண்டும் - பள்ளிகளுக்கு கல்வி அதிகாரி சுற்றறிக்கை
x
தினத்தந்தி 11 March 2020 9:00 PM GMT (Updated: 11 March 2020 5:29 PM GMT)

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திருப்பூர்,

இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் இடையே ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கொரோனா வைரஸ் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வைக்க வேண்டும். 

இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மாணவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக செய்ய வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் இந்நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதையும், வெளி ஊர்களுக்கு பயணம் செல்வதையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் குறித்து தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்கினார் கள். மேலும் பல பள்ளிகளில் சோப்பு போட்டு கைகளை கழுவச்சொல்லி மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

Next Story