மாவட்ட செய்திகள்

மீன்பிடித்துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியல் + "||" + Anti-fouling manufacturers set the road around the fishing harbor

மீன்பிடித்துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியல்

மீன்பிடித்துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியல்
அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அக்கரைப்பேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து கருவாடு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கருவாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கம் சுற்றுச்சுசுவர் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


சாலை மறியல்

சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் நேற்று அக்கரைப்பேட்டை பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பதற்காக கருவாடு தயாரிக்கும் தொழிலாளர்களின் இடங்களை காலி செய்ய கூறுகிறார்கள். இந்த இடத்தை விட்டால் எங்களுக்கு வேறு தகுந்த மாற்று இடமோ, தொழிலோ கிடையாது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இடத்தை காலி செய்யமாட்டோம். எனவே தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுற்றுசுவர் அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என கூறி கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மறியலில் ஈடுபட்ட கருவாடு உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி சந்தை ரோடு மற்றும் முக்குளம் வழியாக செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள முத்துசேர்வாமடம் கிராம சாலை கரடுமுரடாக உள்ளது.
2. திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மறியல்
திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கியதாக கூறி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
3. கரூர் பகுதியில் 2 நாட்களாக மழை: வெங்கமேடு செல்லும் தற்காலிக சாலை அடைப்பு வாகன ஓட்டிகள் அவதி
கரூர் பகுதியில் 2 நாட்களாக மழை பெய்ததால் சேறும் சகதியுமாக மாறிய வெங்கமேடு செல்லும் தற்காலிக சாலை அடைக்கப்பட்டது.
4. ஆண்டிமடம் அருகே தனிமைப்படுத்தப்படும் முகாமை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆண்டிமடம் அருகே கொரோனா தடுப்பு சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாமை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டதை கண்டித்து பருத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.