சேலத்தில், முதியவர்கள் கொலை தொடர்பாக கைதான திண்டுக்கல் வாலிபரை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவு
சேலத்தில் முதியவர்கள் கொலை தொடர்பாக கைதான திண்டுக்கல் வாலிபரை விடுதலை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாநகரில் கடந்த மாதம் தொடர்ச்சியாக 3 முதியவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்குகளில் திடீர் திருப்பமாக 3 கொலைகளையும் செய்தது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் மனுதாக்கல்
இதனிடையே, சேலம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த 2 முதியவர்கள் கொலை வழக்குகளில் இருந்து ஆண்டிச்சாமியை விடுவிக்க கோரி சேலம் ஜே.எம். 1-வது கோர்ட்டில் டவுன் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், தீவிர விசாரணைக்கு பிறகும், நான் தான் இந்த கொலைகளை செய்தேன் என ஒப்புக் கொண்டதாலும், மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளியின் உருவமும் அவரை போல் இருந்ததாலும் ஆண்டிச்சாமியை கைது செய்தோம். தற்போது உண்மையான கொலையாளியை கைது செய்துவிட்டதால் இவரை இந்த வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
விடுதலை செய்ய உத்தரவு
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார், சிறையில் இருக்கும் ஆண்டிச்சாமியை விடுதலை செய்ய உத்தரவிட்டார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story