ஆந்திராவிலிருந்து சொகுசு பஸ்சில் வந்த பயணியிடம் ரூ.92 லட்சம் கைப்பற்றிய போலீசார் ஹவாலா பணமா? என விசாரணை


ஆந்திராவிலிருந்து சொகுசு பஸ்சில் வந்த   பயணியிடம் ரூ.92 லட்சம் கைப்பற்றிய போலீசார்   ஹவாலா பணமா? என விசாரணை
x
தினத்தந்தி 12 March 2020 3:45 AM IST (Updated: 12 March 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த தனியார் சொகுசு பஸ்சில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.92 லட்சத்தை பயணியிடம் இருந்து கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று காலை கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்சை அவர்கள் நிறுத்தி பயணிகளிடம் சோதனை செய்தனர்.

அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் சிலுக்கலூர்பேட்டை சேர்ந்த பயணியான சாம்பசிவ ராவ் (வயது55) என்பவர் கொண்டு வந்த 2 பைகளில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.92 லட்சம் இருப்பது தெரியவந்தது.

விசாரணை

அப்போது அவரிடம் போலீசார் விசாரித்ததில், தான் ஒரு நகை வியாபாரி என்றும், நகை வாங்குவதற்காக பணத்தை சென்னைக்கு எடுத்துச்செல்வதாக சாம்பசிவராவ் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரது கைவசம் இல்லை.

இந்த நிலையில் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்ற போலீசார், கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமா? என்ற சந்தேகத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்டரொக்கப் பணத்தையும் அதனை கொண்டு வந்த நபரையும் ஆரம்பாக்கம் போலீசார், வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.

Next Story