கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில துணை தலைவர் மரகதலிங்கம் தலைமை தாங்கினார்.
17 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை அரசின் மற்ற துறைகளில் காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெறும் முறையற்ற ஆய்வுகள், பணியாளர் விரோத போக்குகள், முறையற்ற உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோஷங்கள்
அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் பேசினார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர்கள் மாரிமுத்து, பாஸ்கரன், சண்முகவேல், ரவி, ராஜசேகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜ் உள்பட திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story