மூலைக்கரைப்பட்டி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு
மூலைக்கரைப்பட்டி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இட்டமொழி,
மூலைக்கரைப்பட்டி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போலீசார் ரோந்து
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரி பகுதியில், மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு குளத்தில் இருந்து டிராக்டரில் 2 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், அவர்கள் மூன்றடைப்பு அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 34), களக்காடு இடையன்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (64) என்பதும், மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், அய்யப்பனின் அண்ணன் அருணாச்சலத்துக்கு (42) மணல் கடத்தலில் தொடர்பு இருப்பதும், அவர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story