மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி + "||" + Don't believe rumors related to the corona virus; Interview with Collector Prashant Vadanere

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேட்டி
குமரி மாவட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
நாகர்கோவில், 

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் முதல்–அமைச்சர் வழிகாட்டுதல்படி அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லை. யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. சுகாதாரத்துறை மூலமாக மாவட்டம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த பகுதி மக்களுக்கும், கடைக்காரர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தன்னம்பிக்கையோடு இந்த வைரஸ்சை சமாளிக்க முடியும் என்று மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வைரஸ் பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கூட்டத்தில் போகும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பற்றிய தகவலை சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். சில நேரங்களில் யாராவது வெளிநாட்டில் இருந்து வந்தால் அக்கம், பக்கத்தில் உள்ள மக்கள் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவருக்கு காய்ச்சல் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி தகவல் கொடுத்தால் அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில் தவறு இல்லை. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உயிருக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உயிருக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

கொரோனா வைரஸ் வி‌ஷயத்தில் நமது மாநிலம் கட்டுப்பாட்டுடன் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் வாட்ஸ்–அப் தகவல்களை உடனே நம்பாதீர்கள். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டும் நம்புங்கள். இந்த வைரஸ்சை முழுக்க, முழுக்க நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடிய வி‌ஷயம். கேரளாவுக்கு வேலைக்குச் சென்று வரக்கூடிய அனைவரையும் பரிசோதனை செய்ய முடியாது. ஈரானில் உள்ள மீனவர்களை நமது நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஈரானில் உள்ள தூதரகம் மூலமாக மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா: கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் - கொரோனா பணியில் சிறப்பாக செயல்பட்ட 351 பேருக்கு சான்றிதழ்
நாகர்கோவிலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தேசியக்கொடி ஏற்றி வைத்து 351 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
2. நாளை சுதந்திர தின விழா: குமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியேற்றுகிறார் - அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடியேற்றுகிறார்.
3. காய்ச்சல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
குமரி மாவட்டத்தில் சளி மற்றும் காய்ச்சல் இருந்தாலும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிகம் வாசிக்கப்பட்டவை