மாவட்ட செய்திகள்

தம்பியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை + "||" + Worker who stabbed his brother with a knife

தம்பியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

தம்பியை கத்தியால் குத்திக்கொலை செய்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை
தம்பியை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ரெயில்நிலையம் பகுதியை சேர்ந்தவர் கிட்டான். இவரது மகன் சுரே‌‌ஷ் (வயது 28). கூலித்தொழிலாளி. கிட்டான் இறந்து விட்ட நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சுரே‌‌ஷ் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் தன்னை மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு தனது தம்பி சக்திவேலிடம் (22) வலியுறுத்தி வந்தார். ஆனால் சக்திவேல் தன்னிடம் பணம் இல்லை என கூறி வந்து உள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைந்த சுரே‌‌ஷ் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்த சக்திவேலை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் ஒரு மாதத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது தொடர்பாக அவரது சகோதரி சந்தோஸ்வரி (45) பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

4 ஆண்டுகள் சிறை

இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சுரேசுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் கைதான சுரே‌‌ஷ் கடந்த 2015-ம் ஆண்டு முதலே சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு பரிசோதனை
நாகர்கோவில் ஜெயிலில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் உள்பட 150 பேருக்கு சளி, மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.
2. ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை
ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
3. கெலமங்கலம் அருகே தொழிலாளி குத்திக்கொலை மைத்துனர் கைது
கெலமங்கலம் அருகே மது போதையில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
4. போலி கையெழுத்து போட்டு மோசடி: இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ததாக இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.