அச்சரப்பாக்கம் அருகே வழிப்பறி செய்த 3 பேர் கைது


அச்சரப்பாக்கம் அருகே வழிப்பறி செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2020 3:30 AM IST (Updated: 13 March 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கம் அருகே வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் அச்சரப்பாக்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்த பொதுமக்களையும் அச்சுறுத்தும்படி நடந்து கொண்டனர்.

இதனால் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது24), திண்டிவனம் தாலுகா வேட்டவலம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி (20), மனோஜ் (22) என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் சென்னையில் சிலருடன் சேர்ந்து கொண்டு பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story