திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2020 3:50 AM IST (Updated: 13 March 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள ஆந்திரா வங்கி முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.

பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கக்கூடாது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கி இணைப்பு, கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைப்பு, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா, கார்ப்பரேஷன் வங்கி இணைப்பு, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பல கோடி ரூபாய் வராக்கடன் வைத்துள்ள பெரும் முதலாளிகளின் கடன் தொகையை வசூலிக்க தயங்கும் மத்திய அரசை கண்டித்து பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் மகாதேவன், ரவிபாபு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 27-ந் தேதி நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வங்கி ஊழியர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Next Story