மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 14 March 2020 3:00 AM IST (Updated: 13 March 2020 5:19 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது மோட்டார் சைக்கிளை பட்டப்பகலில் ஒருவர் திருடி சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர். அதில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நதீம் (வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிள் திருடி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story