ஏரல் அருகே தாய் திட்டியதால் விபரீதம்: 6–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


ஏரல் அருகே தாய் திட்டியதால் விபரீதம்:  6–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2020 4:00 AM IST (Updated: 13 March 2020 9:09 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே தாய் திட்டியதால் 6–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏரல், 

ஏரல் அருகே தாய் திட்டியதால் 6–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

6–ம் வகுப்பு மாணவி 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்டாரவிளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெனிஸ்டன் செல்வின்துரை (வயது 42). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரீட்டா எமிமாள் (37). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன்.

மூத்த மகள் அனு ஜான்சிராணி (12), அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6–ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் தனது பெயரின் ஆங்கில முதல் எழுத்தை காம்போஸ் மூலம் கையில் கிழித்து எழுதினாள். இதனை அறிந்த தாயார் ரீட்டா எமிமாள் மகளை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இதுகுறித்து தந்தையிடம் கூறுவதாகவும் தெரிவித்தார்.

தற்கொலை 

எனவே, தன்னை தந்தை கண்டிப்பார் என்று கருதி அனு ஜான்சிராணி மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் திடீரென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த அனு ஜான்சிராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story