மாடு விடும் விழா; சீறிப்பாய்ந்த காளைகள்


மாடு விடும் விழா; சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 14 March 2020 3:30 AM IST (Updated: 13 March 2020 9:30 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில் மாடுவிடும் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பேரணாம்பட்டு, மாதனூர், கிரு‌‌ஷ்ணகிரி வாணியம்பாடி, காட்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சித்தூர், வி.கோட்டா, பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து அனுமதித்தனர்.

விழாவை உதவி கலெக்டர் கணே‌‌ஷ், தாசில்தார் வத்சலா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறி பாய்ந்து சென்றன.

துணை தாசில்தார் தேவி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இதில் காயமடைந்த 15 பேருக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த 2 பேர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் குமார், செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் தட்டப்பாறை, சின்னாலப்பல்லி இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story