தாக்குதல் சம்பவத்தை கண்டித்து 10 கிராம மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


தாக்குதல் சம்பவத்தை கண்டித்து 10 கிராம மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 14 March 2020 4:00 AM IST (Updated: 14 March 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

தாக்குதல் சம்பவத்தை கண்டித்து 10 கிராம மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளளம் கடற்பகுதிகளில் நாகை மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக தகவல் அறிந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 10-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் நாகை மீனவர்களை விரட்டிச் சென்றனர். இதனால் நாகை மீனவர்கள் அதிவேகமாக விசைபடகை ஓட்டிச் சென்றனர். இதை தொடர்ந்து நாகை மீனவர்கள் படகிலிருந்து கற்கள், சோடா பாட்டில்களை வீசி வெள்ளப்பள்ளம் மீனவர்களை தாக்கினர். இதில் 6 வெள்ளப்பள்ளம் மீனவர்களும் நாகை மீனவர் ஒருவரும் காயமடைந்து நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தாக்கியவர்கள் மீதும், சுருக்குமடி பயன்படுத்தி மீன்பிடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, பு‌‌ஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான பைபர் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர். மீனவ கிராமங்களில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story