திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணைக்கவரும் செயற்கை நீரூற்று
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணைக்கவரும் வகையில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இதை திரளான பொதுமக்கள் கண்டு களித்து சென்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திரளான பொதுமக்கள் கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறுகிறார்கள்.
மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் அலுவலகங்கள் உள்ளதால் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வண்ண வண்ண கலரில் பூச்செடிகளை வைத்து தொங்கும் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
செயற்கை நீரூற்று
மேலும் அந்த பூச்செடிகளுக்கு நவீன முறையில் நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை நாள்தோறும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் மாடி தோட்டத்தை கண்டு ரசித்தப்படி சென்றனர். மேலும் பொதுமக்கள் கலெக்டரை வெகுவாக பாராட்டினார்கள் .
மேலும், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலெக்டர் அலுவலகம் முன்பு செயற்கை நீரூற்று அமைக்க முடிவு செய்து பணியை துரிதப்படுத்தினர். அதை தொடர்ந்து நேற்று கலெக்டர் நுழைவுவாயில் முன்பு செயற்கை நீரூற்று தொடங்கி வைக்கப்பட்டது. இது கண்ணைக் கவரும் வகையில் மிகவும் அழகாக இருந்தது. இதனை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்து சென்றனர்.
Related Tags :
Next Story