கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மும்பையில் மேலும் 7 ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க   மும்பையில் மேலும் 7 ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள்
x
தினத்தந்தி 14 March 2020 5:17 AM IST (Updated: 14 March 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மும்பையில் மேலும் 7 ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மும்பை, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மராட்டியத்திலும் நுழைந்து உள்ளது. மும்பையில் அந்தோியை சேர்ந்த தம்பதி உள்பட கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3-ஐ தொட்டுள்ளது. இந்தநிலையில் மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த படுக்கைகளின் எண்ணிக்கை 28-ல் இருந்து 78 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் இருமல், காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் சில ஆஸ்பத்திரிகள்

இதுதவிர காட்கோபர் ராஜவாடி, பாந்திரா பாபா ஆஸ்பத்திரி உள்ளிட்ட மேலும் சில ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி அந்தேரி கூப்பர் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடனும், குர்லா பாபா ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடனும், பாந்திரா பாபா ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடனும், காட்கோபர் ராஜவாடியில் 20 படுக்கைகளுடனும், முல்லுண்டு போர்டிஸ் ஆஸ்பத்திரியில் 15 படுக்கைகளுடனும், வடலாவில் உள்ள மும்பை துறைமுக ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகளுடனும், மத்திய ரெயில்வே அம்பேத்கர் ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடனும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பையில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 8 ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் 233 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story