தாராவியில் மாநகராட்சி துணை கமிஷனர் ஆய்வு


தாராவியில்   மாநகராட்சி துணை கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 14 March 2020 5:20 AM IST (Updated: 14 March 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.

மும்பை, 

மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் கிரண் திவ்காவ்கர் நேற்று முன்தினம் 187-வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கம், சாக்கா பிரமுக் முத்து பட்டன், தாராவி மேம்பாட்டு பணி செயலர் பி.எஸ்.கே. கணேஷ் மற்றும் அதிகாரிகளுடன் தாராவியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தாராவியில் நிலவி வரும் சுகாதார நிலையை பார்வையிட்டார். பின்னர் அவர் தாராவியை சுத்தமாக வைத்திருக்க என்னென்ன பணிகளை செய்யலாம் என்பது குறித்து கவுன்சிலர் மாரியம்மாள் முத்துராமலிங்கத்திடம் ஆலோசனை நடத்தினார்.

மேலும் தாராவியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், சாக்கடை கால்வாய்களை முறையாக பராமரிக்கவும், குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாரியம்மாள் முத்துராமலிங்கம், முத்துபட்டன், பி.எஸ்.கே. கணேஷ் ஆகியோரிடம் துணை கமிஷனர் கிரண் திவ்காவ்கர் உறுதி அளித்தார்.

Next Story