உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை
திருப்பத்தூர் நகராட்சி கடைகளுக்கு உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சி கடை வியாபாரிகள் நல சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. வியாபாரிகள் நல சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.ரங்கநாதன், இணை செயலாளர் பாண்டியன், துணை செயலாளர் பாலாஜி, பொருளாளர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் டி.கே.மோகன் வரவேற்றார்.
கூட்டத்தில், திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு முன்னறிவிப்பு இன்றி திடீரென்று வாடகை அதிகமாக பல மடங்கு உயர்த்தி உள்ளார்கள், இதனால் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகின்றனர், எனவே உயர்த்தப்பட்ட வாடகையை நகராட்சி நிர்வாகம் திரும்ப பெற வேண்டும், திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணை செயலாளர் ரவி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story