சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழ்பென்னாத்தூர்,
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் ஜி.ஏழுமலை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அமுதா, பொருளாளர் ஷம்ஷாத் பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் இந்திராகாந்தி வரவேற்றார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சின்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழக அரசு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியாரிடம் முதலில் சென்னை மாநகாட்சி பள்ளிகளில் வழங்க ஒப்படைத்துள்ளது. அதனை படிப்படியாக தமிழகம் முழுவதும் கொண்டுவர அரசு நினைப்பதை கைவிட்டு சத்துணவு அமைப்பாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும். ஓய்வூதியத்தை குடும்ப நல ஊதியமாக வழங்க வேண்டும் என்றார்.
இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய இணை செயலாளர் சகலகலாவாணி நன்றி கூறினார். பின்னர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
Related Tags :
Next Story