குடிசை வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்


குடிசை வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 5:58 PM IST)
t-max-icont-min-icon

வயலூர் கிராமத்தில் குடிசை வீட்டில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம் நாசமானது.

வேட்டவலம், 

வேட்டவலம் அருகே வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் (வயது 80). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம் (75). இவர்கள் கரும்பு தோகையிலான குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வீட்டில் சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் வீடு முழுவதும் தீ பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மாயாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தால் வீட்டில் இருந்த துணி, அரிசி மற்றும் அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து வேட்டவலம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story