சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை


சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2020 3:30 AM IST (Updated: 14 March 2020 6:37 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாவிலியூத்து கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. அவருடைய மனைவி மருதக்கனி. இவர்களுடைய மகள் மாரியம்மாள் (வயது 18). 12–ம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனி ஜவராஜா நகரில் உள்ள தனது பாட்டி காளியம்மாள் வீட்டில் தங்கியிருந்து தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்று வந்தார். மாரியம்மாள் தீவிர முயற்சி செய்து படித்தும் சரியாக படிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் மாரியம்மாள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காளியம்மாள் வீட்டில் இருந்த அனைவரும் மாரியம்மாளை மட்டும் வீட்டில் விட்டு பாபநாசம் சென்று விட்டனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது மாரியம்மாளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கிணற்றில் குதித்து தற்கொலை 

இந்நிலையில் நேற்று காலை சங்கரன்கோவில்– அச்சம்பட்டி ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் அருகே 2 செருப்புகள் மட்டும் கிடப்பதை கண்ட அப்பகுதியினர் இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் மாரியம்மாளின் உறவினர்களும் வந்து, இந்த செருப்பு மாரியம்மாளுடையது என்பதை உறுதிப்படுத்தினர்.

அதன் பின்னர் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி சகாயராஜ் மற்றும் போக்குவரத்து நிலைய அலுவலர் பார்வதிநாதன் மற்றும் குழுவினர் வந்து கிணற்றில் இறங்கி தேடினர். கடும் போராட்டத்திற்கு பிறகு மாரியம்மாளின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது உடலை சங்கரன்கோவில் தாலுகா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியம்மாள் எதற்காக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியம்மாளுக்கு விக்னேஷ், மகாராஜன் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story