தூத்துக்குடியில் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பயிற்சி அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பயிற்சி  அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 March 2020 5:00 AM IST (Updated: 14 March 2020 8:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கான பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கான பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்தார்.

பயிற்சி முகாம் 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கான ஒருநாள் பயிற்சி முகாம், தூத்துக்குடி ரெயில்நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது. தூத்துககுடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ் (மத்தியபாகம்), கிருஷ்ணகுமார் (தென்பாகம்), அன்னராஜ் (முத்தையாபுரம்), பிரபாவதி (குற்றப்பிரிவு), பிரேமா ஸ்டாலின் (தாளமுத்துநகர்), கோகிலா (தெர்மல்நகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘போலீஸ் நண்பர்கள் குழு கடந்த 1994–ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. போலீஸ் நண்பர்கள் குழுவினர் போலீசாருடன் இணைந்து செயல்படுவதால் அவர்கள் போலீசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செயல்படுகிறார்கள்‘ என்றார்.

மீட்பு பணி 

பயிற்சி முகாமில் போலீஸ் நண்பர்கள் குழுவினர் 170 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆபத்து காலத்தில் துரிதமாக செயல்படுவது குறித்தும், மீட்பு பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்தும், காயம் அடைந்தவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

Next Story