தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள குடுமியாம்பட்டி பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் லேப் டெக்னீசியன் படிப்பை படித்து உள்ளார். இவர் அண்மையில் பெங்களூருக்கு சென்று திரும்பினார். கடந்த சில நாட்களாக இவருக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் வாலிபரை சோதித்தனர். இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை நேற்று தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்த மருத்துவக்குழுவினர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினார்கள். இதுதொடர்பாக தகவல் பரவியதால் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
பீதியடைய தேவையில்லை
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) சிவக்குமார் மேற்பார்வையில் மருத்துவக்குழுவினர் நடத்திய பரிசோதனைகளின் முடிவில் வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக மருத்துவக்குழுவினர் கூறுகையில், அரூரில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. சளி மற்றும் வைரஸ் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனையும் நடத்தப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story